(க.கிஷாந்தன்)

தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாவை பெற்றுக்கொடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியோருக்கும் மலையக தோட்ட தொழிலாளர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் இன்று ஹட்டன் புரூட்ஹில் தோட்ட தொழிலாளர்கள் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் பாதாதைகளை ஏந்திய வண்ணம் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி நன்றியை தெரிவித்தனர்.