பிரித்தானிய பணக்கார பெண்களின் பட்டியலில் இந்திய வம்சாவளி பெண் இடம்பெற்றுள்ளார்.
பிரித்தானியாவின் நிதி தலைவராக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கின் மனைவியான அக்ஷதா இந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சண்டே டைம்ஸின் பிரித்தானிய பணக்கார பட்டியலில், 350 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ள ராணியை விட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அக்ஷதாவை பணக்காரர் ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவர் தனது குடும்பத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தில் 430 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளுக்கு சொந்தக்காரராகியதையடுத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.

அக்ஷதா இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரான - கோடீஸ்வரர் என். ஆர். நாராயண மூர்த்தி என்பவரின் மகள் ஆவார். இவரின் தந்தை இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தை என்றும், 'எல்லா காலத்திலும் 12 சிறந்த தொழிலதிபர்களில் ஒருவராகவும்' விவரிக்கப்படுகிறார்.
