சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி கொடுக்க மறுத்த நபரை இரண்டு பேர் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

மத்தியபிரதேச மாநிலம் குணா மாவட்டம் கரோக் கிராமத்தை சேர்ந்த இரு நண்பர்கள் தங்கள் கிராமத்தில் உள்ள ஒரு கடையில் சிகரெட் வாங்கியதன் பின்பு அங்கு நின்று கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த நபரிடம் சிகிரெட்டை பற்றவைக்க தீப்பெட்டியை கேட்டுள்ளனர்.

அதற்கு அந்த நபர் தன்னிடம் தீப்பெட்டி இல்லை என கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த நண்பர்கள் இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு குறித்த நபரின் தலையில் சரமாரியாக குத்தியுள்ளனர். இதனையடுத்த கத்தி குத்து தாக்குதலுக்குள்ளாகி  படுகாயமடைந்த நபரை அயலவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தப்போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளார்.

இந்த தனையடுத்து குறித்தி இரு நண்பர்களை பொலிஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.