இலங்கைக்கு அருகே மற்றொரு சூறாவளி உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த அழுத்ததுடன் தாழமுக்கம் உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் குறித்த தாழமுக்கம் சூறாவளி புயலாக மாற்றமடைந்து எதிர்வரும் நாடக்களில் இலங்கை மற்றும் தென்னிந்தியாவை தாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உவா, மத்திய, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் ஒரு சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம், 50மி.மீற்றர் வரை கனமான மழைவீழ்ச்சி சில இடங்களில் பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மறு அறிவித்தல் வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM