Published by T. Saranya on 2020-11-28 17:28:27
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்டஸ்பீ தோட்ட அவரவத்தை பிரிவில் நபரொருவர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாமிமலை ஸ்டஸ்பீ தோட்டத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (28.11.2020) காலை ஆறு மணிக்கு தனது மாட்டு பண்ணைக்கு புல் அறுக்க சென்ற வேளை சடலமாக கிடந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கு ஒரு குழந்தையும் மற்றும் கர்ப்பிணியான மனைவியும் உள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தோட்ட உத்தியோகத்தர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யசரத்ன பண்டார பணிப்புரையில் உதவி அதிகாரி ஆனந்த பத்மசிறி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
காலை 6 மணிக்கு புல் அறுக்க சென்றவரை காணவில்லை என தேடிய போது அயலவர்கள் இவ்வாறு ஆற்றில் மிதப்பதை கண்டதாகவும் தோட்ட முகாமையாளருக்கு அறிவித்ததாகவும் பொலிஸ் உதவி அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி நரசிம்ம பெருமாள் சென்று பார்வையிட்ட பின்னர் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.