முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட குரவில் பகுதியில் நேற்றிரவு (27) இரண்டு இளைஞர்கள் 200 கிராம் வெடிமருத்துடன்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 மற்றும் 25 வயதுடைய குறித்த இரண்டு சந்தேக நபர்களிடமும் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததன் பின்னர் குறித்த இருவரும் இன்று (28) காலை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிமன்றில் பதில் நீதவான் குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு குரவில்  பகுதியில் விடுதலைப்பலிகளின் ஆயுத தொழிற்சாலை ஒன்று இயங்கிய இடத்தில் இருந்து குறித்த வெடிமருந்துகளை மீட்டதாகவும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பி சென்றுள்ளதாகவும் இரண்டு இளைஞர்கள் 200 கிராம் வெடிமருந்துடன்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் உடையார்கட்டு பகுதியை சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்கள் எனவும் இதில் ஒருவர் ஏற்கனவே புதுக்குடியிருப்பு பொலிசாரால் கடந்த வருடம் 52 கிலோகிராம் வெடி மருந்துடன் கைது செய்யப்பட்ட நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்காக : https://www.virakesari.lk/article/95492