பசறை- நமுனுகுல வீதியில் அமைந்துள்ள கனவரல்ல தோட்டத்தின் 13 ஆம் கட்டைப் பகுதியில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வெளிவந்த பீ.சி.ஆர் முடிவுகளின் படியே இந்நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

 இவ்வாறு நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 11 வயது சிறுமியும், இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.  

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பீ.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 

இப்பகுதியில் ஏற்கனவே 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.