யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஓமான் நாட்டிலிருந்து வந்தவா்களை ஏற்றிவந்த பேருந்து நேற்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, அங்கிருந்த கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளா் உள்ளிட்டவா்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. ஓமான் நாட்டிலிருந்து வந்த 25 பயணிகளுடன் யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு வந்த பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட  துாக்கக் கலக்கத்தின் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி நீா் விநியோக குழாய் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த சம்பவத்தில் 17 போ் காயமடைந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அவர்களோடு சம்பந்தப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.