Published by R. Kalaichelvan on 2020-11-28 15:30:24
பத்தரமுல்ல - தியவன்ன ஓயாவில் இருந்து அடையாளம் காணப்படாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.