உயிரிழந்த சிறுமியின் சடலத்தை கடித்த தெருநாய் - வைரலாகும் காணொளி

Published By: Digital Desk 3

28 Nov, 2020 | 02:27 PM
image

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் சிறுமியின் சடலத்தைத் தெரு நாய் கடிப்பது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியான 20 விநாடிக் காணொளியில், வைத்தியசாலையின் தனிமையான பகுதி ஒன்றில், ஸ்ட்ரெச்சரில் ஓர் உடல் கிடத்தப்பட்டுள்ளது. வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்த சடலத்தை ஒரு நாய் தொடர்ச்சியாக, மெல்லக் கடிக்கிறது.

வீதி விபத்தொன்றில் சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்தாரா அல்லது வைத்தியசாலையில் அவருக்கு உயிர் பிரிந்ததா என்று கூறப்படவில்லை.

இது குறித்து சிறுமியின் தந்தை , ஒன்றரை மணி நேரமாக எனது மகளின் உடல் கண்டுகொள்ளப்படவில்லை. இதற்கு வைத்தியசாலையின் அலட்சியமே காரணம் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

இதனிடையே வைத்தியசாலையில் தெரு நாய்கள் தொல்லை இருப்பதை வைத்தியசாலை நிர்வாகமும் ஒப்புக்கொண்டுள்ளது.

இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று வைத்தியசாலை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் வைத்தியர் தெரிவித்துள்ளதாவது, 

வழக்கமான நடைமுறைகளுக்குப் பிறகு உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடற்கூராய்வு செய்ய வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார்கள். அப்போது சடலத்தின் அருகே யாரும் இல்லாதபோது இந்தச் சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள சமாஜ்வாதி கட்சி, ''இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளது.

காணொளி; https://twitter.com/i/status/1331984795283275777

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52