(செ.தேன்மொழி)

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் கடந்த 29 நாட்களுக்குள் 796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

இன்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் சமூக இடைவெளியை பேணாமை மற்றும் முகக்கவசம் அணியாமை தொடர்பில் மாத்திரம் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த 29 நாட்களுக்குள் இது தொடர்பில் 796 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இந்த சட்டவிதிகளை மீறும் நபர்களை கைது செய்வதுடன் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.