உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளது.

அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 322 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 இலட்சத்து 51 ஆயிரத்து 110 ஆக உயர்வடைந்து உள்ளது. 

இதேபோன்று கடந்த 24 மணிநேரத்தில் 485 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.  

இதனால் இந்தியாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 200 ஆக உயர்ந்து உள்ளது. 

இதேபோன்று, சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 54 ஆயிரத்து 940 ஆகும்.

கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 452 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். 

இதனால், சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றவர்களின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் இதுவரை 87 இலட்சத்து 59 ஆயிரத்து 969 ஆக உயர்ந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.