(இராஜதுரை ஹஷான்)
வரவு - செலவு திட்டத்தை அரசியல் இலாபத்துக்காக எதிர்தரப்பினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பாதீடு குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும் கூட்டம் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை மாகாண மட்டத்தில் இடம்பெறும் என பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
செயற்பாடுகளுடன் மீண்டும் கிராமத்துக்கு என்ற செயற்திட்டத்தின் கீழ் வரவு- செலவு திட்டம் தொடர்பில் மாகாண மட்டத்தில் இடம்பெறும் கூட்டம் தென்மாகாணத்தில் இருந்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலக செயலணி பிரிவில் கலந்துரையாடல் இடம் பெற்றது.
அதில், பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டதாவது, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் தனி நபர் ஒருவரின் அபிப்பிராயங்களை கொண்டு தயாரிக்கப்படவில்லை. அரச மற்றும் தனியார் துறையினரை உள்ளடக்கி நாட்டு மக்களின் முன்னேற்றத்தை கருத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. சரியான தீர்மானங்கள் பல வரவு- செலவு திட்டத்தின் ஊடாக எடுக்கப்பட்டுள்ளது.
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இம்முறை வரவு - செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 'கமசதர பிலிசர' செயற்திட்டம் ஊடாக பெற்றுக் கொண்ட மக்களின் கருத்துக்கள் வரவு - செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பயனுடையதாக அமையும். சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டம் முழுமையாக செயற்படும். வரவு - செலவு திட்டம் குறித்து எதிர்தரப்பினர் தவறான நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர். வரவு - செலவு திட்டம் மக்களுக்கு முழுமையாக தெளிவுப்படுத்தப்பட வேண்டும்.
எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை மாகாண மட்டத்தில் வரவு - செலவு திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்றார்
வரவு - செலவு திட்டத்தில் தேசிய வருமானத்தை ஈட்டுவது குறித்து விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மக்களை மையப்படுத்திய வரவு -செலவு திட்டம் பயனுடையதாகவே அமையும் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM