(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய தரப்பினருக்கும் இடையில் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தைகள் கடந்த காலத்தில் மூன்று தடவைகள் இடம்பெற்றுள்ளன.

அந்த பேச்சுவார்த்தைகளை மீள தொடரும் எதிர்பார்ப்புடன் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், கூடிய விரைவில் இப் பேச்சுவார்த்தை மீளத் தொடரப்பட்பட்டு, இப் பிரச்சினைக்கு நிரந்தரத்த தீர்வு எட்ட முடியும் எனவும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற  , கடற்தொழில் அமைச்சு ம மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த  அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையின் அனைத்துக் கடற்பகுதிகளையும் ஆராய்ந்து, அந்தந்த பகுதிகளில் அறுவடை செய்யக்கூடிய மீனினங்களின் அப்படிடையில், அவற்றை பிடிப்பதற்கான முறைமைகளை வறையறை செய்து, அவற்றை நடைமுறைப்படுத்துவது முக்கிய நோக்கமாகும்.

இந்த ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவதற்கென போதிய ஆளணிகளை இணைத்துக் கொள்ளவுள்ளோம். வெளிநாட்டு இழுவை வலைப் படகுகளின் எல்லைத்தாண்டியதும், தடைச் செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதும், கடல் வளத்தை அழிக்கினற மற்றும் எமது கடற்றொழிலாளர்களின் தொழில் சார்ந்த உபகரணங்களுக்கு சேதம் விளைவிப்பதுமான நடவடிக்கைகள் காரணமாக எமது கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது ஒரு பாரிய பிரச்சினையாகவே எமது கடற்றொழில் துறையில் தொடர்கின்றது. இது தொடர்பில் நான் ஏற்கனவே தெரிவித்திருந்ததைப் போல், பாக்கு நீரினைப் பகுதியில் கடல் வளம் தொடர்பிலான ஓர் ஆய்வினை இரு நாட்டினதும் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்களைக் கொண்டு மேற்கொள்வதற்கும், அதன் பின்னர் அந்த ஆய்வின் பெறுபேறுகளுக்கு அமைவாக ஓர் முகாமைத்துவ அலகொன்றினையும் செயற்படுத்தும் திட்டம் இருக்கின்றது.

ஏற்கனவே, இலங்கை அரசுக்கும் இந்தியத் தரப்பினருக்கும் இடையில் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தைகள் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் மூன்று தடவைகள் இடம்பெற்றுள்ளன.

அந்த பேச்சுவார்த்தைகளை மீள தொடரும் எதிர்பார்ப்புடன் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றேன். அந்த வகையில் கூடிய விரைவில் இப் பேச்சுவார்த்தை மீளத் தொடரப்பட்பட்டு, இப் பிரச்சினைக்கு நிரந்தரத்த தீர்வு எட்ட முடியும்.

இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளினால் எமது கடல் பகுதிகளுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கூடிய விரைவில் இத்தகைய பாதிப்புகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆழ்கடல் கடற்றொழிலை பரவலாக மேற்கொள்ளத்தக்க வகையில் பயிற்சிகளை வழங்கி, அதற்குரிய படகுகள், கருவிகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

 சர்வதேச கடல் மற்றும் ஆழ்கடல் கடற்றொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கென தேசிய நிறுவனங்களை அதில் ஈடுபடுத்தும் ஏற்பாடுகளுடன், நீள் கடற்றொழில் முறைமைக்கு மேலதிகமாக கைத்தடி தூண்டில் வரிசை முறைமையை அறிமுகஞ் செய்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், மீனினங்களை பெருக்கும் வகையில் பயன்பாட்டுக்கு உதவாத பேருந்துகள்,; ரயில் பேட்டிகள், ரயில் எஞ்சின்கள மற்றும் பழுதடைந்த படகுகள்  போன்றவற்றை கடலில் வைப்பிலிடும் ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.