சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி, முதல் ஆறு நாட்களில் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் 320 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்திருப்பதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

அத்துடன் சென்னையில் மட்டும் கபாலி தினமும் ஒரு கோடி வசூலித்து வருவதாகவும், இது மிகப்பெரிய சாதனை என்றும், தெரிவித்த தாணு, இயக்குநர் பா. ரஞ்சித்திற்கு மீண்டும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு அளித்திருக்கிறார்.

கபாலி படம் முதன்முதலாக இன்று மலாய் மொழியில் டப் செய்யப்பட்டு 300க்கும் மேற்பட்ட மலேசிய படமாளிகைகளில் வெளியாகிறது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் தாணு.