நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

23ஆம் திகதி ஒருவரும், 27 ஆம் திகதி இரண்டு பேரும், 25 ஆம் திகதி மூவரும் பேரும், 26 ஆம் திகதி இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பின் பல பகுதிகளைச் சேர்ந்த, 36, 87, 54, 78, 83, 68, 69, 70 ஆகிய வயதுடைய நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் ஐவர் வீடுகளில் உயிரிழந்துள்ளதுடன் ஏனையவர்கள் வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும் கொழும்பு மெகசின் சிறைக்கைதி ஒருவர் உட்பட  நான்கு ஆண்களும் அடங்குகின்றனர். 

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது.