போரில் இறந்தவர்களுக்கான நினைவேந்தலுக்கு நீதிமன்றங்கள் ஊடாக தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 6.05 மணிக்கு அரசியல் தலைவா்கள், பொதுமக்கள் என பலரும் மாவீரா்களுக்கான ஈகை சுடா்களை தமது இருப்பிடங்களிலேயே ஏற்றி அஞ்சலிகளை செலுத்தியிருக்கின்றனா். 

மாவை சேனாதிராஜா, சீ.வி.கே.சிவஞானம், வ.பாா்த்தீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், உள்ளிட்ட பலா்  மாவீரா்களுக்கான அஞ்சலிகளை உணா்வுபூா்வமாக செலுத்தியிருக்கின்றனா். 

இராணுவம் மற்றும் பொலிஸாா், புலனாய்வாளா்கள் குவிக்கப்பட்டு கெடுபிடிகளுக்கு மத்தியில் உணா்வுபூா்வமாக தமிழா் தாயகத்தில் மாவீரா் நாள் நினைவேந்தல் நடைபெற்றிருக்கின்றது.

இதேவேளை கோப்பாய் துயிலும் இல்லத்தின் பிரதான வீதியான கோப்பாய் இராசபாதை இராணுவம் மற்றும் பொலிசாரால் வீதி தடைபோடப்பட்டு அவ் வீதியால் செல்பவர்கள் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.