வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிப்பு

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்துகொண்ட 2020ம் ஆண்டுக்கான மாவீரர் எழுச்சிநாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவேந்தல் அனுஸ்டிப்பு!

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா மாகாறம்பைக்குளம் இத்தியடி விநாயகர் ஆலயத்தில் இன்றைய தினம் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினரால் ஈகைச்சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்படோர் உறவுகள் சங்கத்தின் செயலாளர், உயிர் போகும் நிலைவந்தாலும் மாவீரர் நாள் அனுஸ்டிப்பதை யாரும் தடுத்துட முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.