தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது இல்லத்தில் இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அவரது இல்லத்தில் இடம் பெற்ற நிகழ்வில் நினைவுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர்முனைக் கட்டளைத்தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப் கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை ஏற்றினார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் 

“தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எம் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பர்.”

தனது வாசஸ்தலத்தில் விடுதலை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தீபம் ஏற்றி அஞ்சலி!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் உள்ள தனது வீட்டோடு இணைந்த அலுவலகத்திற்கு முன்பாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். 

அவரோடு வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவர் கோ.கருணானந்தராசாவும் இணைந்து அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன் முல்லைத்தீவு, உடையார்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இவருடன் இணைந்து முன்னாள் போராளிகளின் உறவினர்களும் அஞ்சலி நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.