யாழில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்ட சிவப்பு - மஞ்சள் கொடிகள் அகற்றப்பட்டன

27 Nov, 2020 | 08:31 PM
image

யாழ். பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில், போரில் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களது நினைவாக  இன்று தமது வீட்டில் நினைவேந்தலை முன்னெடுக்க ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்த நிலையில் திடீரென இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோடிக்கப்பட்டிருந்த சிவப்பு-மஞ்சள் கொடிகளை அகற்ற வைத்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

போரில் இறந்தவர்களின் நினைவாக வருடா வருடம் நினைவேந்தல் நடத்தும் இன்று  நவம்பர்-27 அன்று தமது வீட்டில் அவர்களது இறந்தவர்களின் படத்தை வைத்து சிவப்பு-மஞ்சள் கொடிகளால் அலங்காரம் செய்து நினைவேந்தலுக்கு தயார் செய்திருந்த நிலையில்  நண்பகல் திடீரென சென்ற இராணுவத்தினரால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வீடுகளில் நினைவேந்துமாறு நீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ள நிலையில் தாம் தமது உறவுகளுக்கு தமது வீட்டில் நினைவேந்தலை செய்ய உள்ளதாக வீட்டார் இராணுவத்திற்கு தெரிவித்த போதிலும், அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த சிவப்பு-மஞ்சள் கொடிகளை அகற்ற வைத்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

எவரும் ஒன்று கூடி நினைவேந்தலை முன்னெடுக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்ட நிலையில் மேலதிக இராணுவத்தினர் திரும்பிச் சென்றிருந்த போதிலும் அங்கு தொடர்ந்து இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

குறித்த வீட்டாரின் மூன்று பேர் மாவீரர்களாகிய நிலையில் அவர்களது திருவுருவப்படம் வைக்கப்பட்டு கார்த்திகை பூ கோலம் போடப்பட்டு நினைவேந்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19