விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவர் மஹர சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில், இவ்வாறு கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டு  அங்கிருந்து வெலிகந்த கொவிட் சிகிச்சை மையத்துக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரை வெலிகந்தை சிறைக்கு மாற்ற வேண்டாம் எனவும், அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் அவருக்கு சிகிச்சையளிக்குமாரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.