கொரோனா வைரஸ் தொற்றுநோய் 25 ஆண்டுகளாக அதிகரித்து வரும் பாலின சமத்துவத்தை அபகரித்து விடக்கூடும்  என்று ஐக்கிய நாடுகள் சபையின்  பெண்கள் தொடர்பாக புதிய உலகளாவிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தால் பெண்கள், வீடுகளையும், குடும்பங்களையும் பராமரிப்பதற்கு கணிசமான அளவு கூடுதலாக வேலை செய்ய வேண்டியுள்ளது.

Illustrations of Teni's diary

"நாங்கள் 25 வருடங்கள்  பணியாற்றி உறுவாக்கியுள்ள  பால்நிலை சமத்துவம் உள்ளிட்ட அனைத்தும், ஒரு வருடத்தில் இழக்கப்படலாம்" என்று ஐ.நா பெண்கள் அமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் அனிதா பாத்தியா தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேலைவாய்ப்புகள்  மற்றும் கல்வி வாய்ப்புகள் இழக்கப்படலாம், மேலும் பெண்கள்  மனம்  மற்றும் உடல் ஆரோக்கியத்தால் பாதிக்கப்படலாம். என அவர் எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய்க்கு முன்பே, உலகெங்கிலும் ஒவ்வொரு நாளும்  16 பில்லியன் மணிநேர ஊதியம் பெறாத வேலைகளில் முக்கால்வாசி பெண்கள் ஈடுபடுவதாக  ஐக்கிய நாடுகள் சபையினால்  மதிப்பிடப்பட்டிருந்தது.

இதனை விபரமாக கூறுவதானால், கொரோனா வைரஸுக்கு முன்பு, ஆண்களால் செய்யப்படாத வேலைகள் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும், மூன்று மணிநேரம் பெண்களால் செய்யப்பட்டது. இப்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக உள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.

பல பெண்கள் உண்மையில் வேலைக்குச் செல்லவில்லை என்பது மிகவும் ஆபத்தானது,  குறைவான உழைக்கும் பெண்களைக் கொண்டிருப்பதால் ஏற்படும் சிக்கல்கள் பெண்களின் நல்வாழ்வுக்கு மட்டுமல்ல, அவர்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சுதந்திரத்திற்கும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று ஐ.நா. பெண்களை  எச்சரிக்கின்றது.