(செ.தேன்மொழி)

கரந்தெனிய பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திவ்யகஹாவெல பகுதியில் நேற்று யாழக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடமிருந்து உள்நாட்டு துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.