கண்களில் ஏற்படும் மியோகிமியா பிரச்சினைக்கு தீர்வு.!

Published By: Robert

29 Jul, 2016 | 10:16 AM
image

எம்மில் ஒரு சிலருக்கு அவ்வப்போதோ அல்லது எப்போதோ ஒரு சில முறை, ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறியாக இதனை எடுத்துக் கொள்ளவேண்டும். இதேப் போல் கண்கள் துடிப்பதற்கு மருத்துவத்துறையினர் ம்யோகிமியா (myokymia) என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்தல் அதாவது கோப்பியை அதிகமாக பருகுவது கூட இதற்கு காரணங்களாகும். சிலருக்கு கண் துடிப்பானது விட்டுவிட்டோ அல்லது தொடர்ச்சியாகவோ ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட நீடித்து இருக்கலாம். இத்தகைய நிலை ஏற்பட்டால் சற்று தயங்காமல் கண் மருத்துவ நிபுணரை சந்தித்துசிகிச்சைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

மன அழுத்ததைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட்டால், அடிக்கடி கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம். தூக்கத்தையும், உறங்கும் நேரத்தையும் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அதேபோல் எக்காரணம் கொண்டும் கோப்பி அருந்துவதை தவிர்க்கப்பாருங்கள். கண் துடிப்பு நீடித்திருக்கும் போதாவது கோப்பி அருந்துவதை தற்காலிமாக தவிர்க்கவேண்டும். அத்துடன் மது அருந்தாமல் இருந்தாலும் நல்லது. வெகு அரிதாக ஒரு சிலருக்கு கண்ணில் ஏற்படும் வறட்சியினாலும், அவை துடிக்க ஆரம்பிக்கும். இத்தகைய தருணங்களில் தண்ணீர் அருந்துவது, கண்களை முறையாக இமைப்பது போன்ற சிறிய பயிற்சிகளில் ஈடுபட்டாலே நிவாரணம் கிடைக்கும். மேலும் இது குறித்த சில ஆய்வுகள் மூலம், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் கண்களில் உள்ள தசைகள் துடிக்க ஆரம்பிக்கும் என்கிறது. அதிலும் மக்னீசியம் குறைபாடு இருந்தால், கண்கள் துடிக்கும் என்று கூறுகிறது. ஆகவே சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுமுறைகளை மேற்கொண்டால் கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம்.

டொக்டர் அமர் அகர்வால், கண் மருத்துவ நிபுணர்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உறக்கம் தொடர்பான கோளாறுக்குரிய நவீன சிகிச்சை

2025-06-17 16:02:55
news-image

ஒவேரியன் டெரடோமா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-06-16 17:30:08
news-image

ரிலாப்சிங் பொலிகாண்ட்ரிடிஸ் எனும் அரிய பாதிப்பிற்குரிய...

2025-06-14 17:17:51
news-image

ஹைபோநெட்ரீமியா பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-10 19:06:52
news-image

நவீன சத்திர சிகிச்சைகளின் வகைகள் என்ன?

2025-06-09 17:38:05
news-image

லும்பர் ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் எனும் கீழ்ப்பக்க...

2025-06-07 20:35:08
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்புச் சக்தியை...

2025-06-06 18:22:59
news-image

மிட்ரல் வால்வு ஸ்டெனோசிஸ் எனும் இதய...

2025-06-05 17:22:20
news-image

களனி பல்கலைக்கழக ராகம மருத்துவப்பீடத்தில் புதிய...

2025-06-05 13:51:58
news-image

இன்ஹேலரை பாவித்தால் குருதி அழுத்தம் அதிகரிக்குமா?

2025-06-04 18:15:59
news-image

வெரிகோஸ் வெயின் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-06-02 16:05:50
news-image

பிறந்த பிள்ளைகளுக்கு ஏற்படும் மைலோமெனிங்கோசெல் பாதிப்பிற்குரிய...

2025-05-26 17:06:53