தீபாவளி திருநாளன்று வெளியான விஜயின் 'மாஸ்டர்' படத்தின் டீசர் 40 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'.இப்படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் சாதனை படைத்து வருகிறது.

குறிப்பாக 'வாத்தி கம்மிங்..' எனத் தொடங்கும் பாடல் இதுவரை 90 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்திருக்கிறது. 

இதனை தொடர்ந்து ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தீபாவளி திருநாளன்று 'மாஸ்டர்' படத்தின் டீசர் வெளியானது. 

வெளியான முதல் 24 மணி நேரத்திலேயே அதிகமான லைக்குகளைப் பெற்ற தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. 

தற்போது இப்படத்தின் டீசர் 40 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனிடையே 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.