அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் அவர் பங்குபற்றிய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஐதராபாத்தில் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், அஜித் நடிக்கும் 59-வது படமான 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

இதில் அஜித் பங்குபற்றும் துவிச்சக்கரவண்டி சண்டை காட்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதில் அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் பைக்கில் வேகமாக வந்து வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சியை படமாக்கியபோது எதிர்பாராதவிதமாக அஜித்தின் பைக் கவிழ்ந்தது. 

இதில் அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் அஜித் பைக் ஓட்டும்போது சாகசம் செய்வது போன்ற புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.