ஜேர்மனி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  10  இலட்சத்தை கடந்துள்ளது.

கடந்த 24  மணிநேரத்தில் 22,806 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை  1,006,394 உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கடந்த 24  மணி நேரத்தில் 426 பேர் உயிரிழந்துள்ளதோடு, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,586 அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்றினால் 696,000 பேர் குணமடைந்துள்ளார்கள். ஜேர்மனி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 12 ஆவது இடத்திலுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகளை எதிர்கொள்ள ஜேர்மனியில் எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளது. 

உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி அன்று கொரோனா வைரஸ் பரவலை  ஒரு தொற்றுநோயாக அறிவித்தது.

இந்நிலையில் , இன்றுவரை உலகளவில் 6 கோடியே 97 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஹோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.