'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'கேசினோ ' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் மார்க் ஜோயல் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'கேசினோ'. இந்தப் படத்தில் 'மெஹந்தி சர்க்கஸ்' பட புகழ் நடிகர் மதம்பட்டி ரங்கராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'ஓ மை கடவுளே' பட புகழ் நடிகை வாணி போஜன் நடிக்கிறார். 

இவர்களுடன் நடிகர் செல்லா, ஜோன் ரோஷன், முருகேஷ் சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.‌ விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஸ்டான்லி ஜாவி இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் மூலம் ஜோன் மகேந்திரன் நடிகராக அறிமுகமாகிறார். விஜய் நடித்த 'சச்சின்' படத்தை இயக்கிய இயக்குனர் என்பதும், வசனகர்த்தா என்பதும் குறிப்பிடதக்கது. இப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.