கொழும்பிலிருந்து  யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் மீது காட்டு யானையொன்று மோதியதில் குறித்த புகையிரதத்தின் முன்பகுதி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரரவு 7மணிக்கு இடம்பெற்றுள்ளது.

 

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

 

கொழும்பிலிருந்து நேற்று காலை 11.45மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கி குறித்த புகையிரதம சென்ற போது மாலை 7 மணிக்கு கனகராயன்குளம் பகுதியில் ரயில் பாதையில் தரித்துநின்ற காட்டு யானை மீது மோதியுள்ளது.

 

இதனால், குறித்த ரயிலின் முன்பகுதி சேதமடைந்து பழுதடைந்துள்ளதாகவும் இதனால் அன்றைய தினம் ரயில் போக்குவரத்து சேவை மாங்குளம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இதனால் ரயிலில் பயணித்த பயணிகள் பல சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தனர். அத்துடன், போக்குவரத்தும் தாமதமாகியது. குறித்த புகையிரதம் பழுதடைந்துள்ளமையை அடுத்து புகையிரத திணைக்கள அதிகாரிகளின் செயற்ப்பாட்டால் மாங்குளத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை செல்லும் பயணிகள் விசேட பஸ் போக்குவரத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

இதேவேளை, பழுதடைந்துள்ள குறித்த ரயில் திருத்தப் பணிகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு-யாழ்ப்பாணம் சேவைக்கு மற்றுமொரு ரயில் ஈடுபடுத்தப்படும் என அநுராதபுரம் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.