அரச உத்தியோகத்தர்களை வீட்டிலிருந்து கடமையாற்றுமாறு மட்டக்களப்பு அரச அதிபர் பணிப்பு

Published By: R. Kalaichelvan

27 Nov, 2020 | 12:10 PM
image

அக்கரைப்பற்றுப் பகுதியிலிருந்து மட்டக்களப்புக்கு வரும் அரச உத்தியோகத்தர்கள் வீட்டிலிருந்தே கடமையாற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கச்சேரியில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற கொவிட் செயலணிக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்.

அக்கரைப்பற்று பகுதியில் 10 கொரோனா தொற்றாளர்கள், அடையாளம் காணப்பட்டதையடுத்து, கல்முனை, பொத்துவில், அக்கரைப்பற்று ஆகிய பகுதிகிளிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  அரச கடமைக்கு வரும் உத்தியோகஸ்த்தர்களை கடமைக்கு வராமல் அவர்களது, வீட்டிலிருந்தே கடமையாற்றுமாறு பணித்துள்ளோம்.

காத்தான்குடியிலும் புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மாவட்ட கொரோனா செயலணியில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக கிராமமட்டத்திலே உள்ள 5 பேர் கொண்ட கொரோனா செயலணிக்கு, பிரதேச மட்டத்தில் பிராந்திய சுகாதார பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய பிரதேச செயலாளரின் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொது சுகாதார வைத்தியர், ஆகிய குழுவினால் அவர்களுக்கான பயிற்சியை மீண்டும் ஒருதடவை வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது உடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கு மேலாக மட்டக்களப்பு மாநகரத்திற்குப்ட்டப பகுதியில் சிலர் இரகசியமான முறையில் தனியார் வகுப்பக்கள் நடைபெறுவதாகவும் எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதோடு, இதனால் அச்சுறுத்தல் நிலவுவதாகவும் எமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அது கண்டறியப்பட்டால் உரிய சுகாதார முறைப்படி நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதாரத் திணைக்களத்தினர் ஒத்துக் கொண்டுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க கொவிட் - 19 காரணமாக வாழைச்சேனைப் பகுதி முற்றாக மூடப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் தொழில்வாய்ப்பை இழந்தமக்களுக்கும், வாழ்வாதாரங்களை இழங்த மக்களுக்கும் அரசாங்கம் 158 மில்லியனை ஒதுக்கீடு செய்து அதற்காக செலவிடப்பட்டுள்ளது. என அவர் இதன்போது அவர் மேலும் அதரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55