ஹட்டன் நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பொகவந்தலாவ சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆறு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று 26.11.2020.வியாழக்கிழமை இரவு வெளியான பி.சி.ஆர் பிரிசோதனை அறிக்கையிலேயே குறித்த ஆறு பேருக்கும் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
பொகவந்தலாவ, கொட்டியாகலை கிழ்பிரிவு, பொகவானை தோட்டம், செல்வகந்த தோட்டம் , நோர்வூட் வெஞ்சர் தோட்டம், மற்றும் டிக்கோயா சாஞ்சிமலை கிழ்பிரிவு தோட்டத்தில் ஒரு பெண் என 06 பேர் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றுக்கு உள்ளான ஆறு பேரும் கொழும்பு புறக்கோட்டை புளுமென்டல், பம்பலப்பிட்டி ஆகிய பகுதியில் இருந்து கடந்த 17 ஆம் திகதி மேற்படி தோட்டப்பகுதிகளிலுள்ள தமது வீடுகளுக்கு வந்துள்ளனர்.
இதையடுத்து குறித்த 6 பேரும் சுகாதார பரிசோதகர்களினால் சுயதனிமைபடுத்துபட்டு கடந்த 24.11.2020 ஆம் திகதி செவ்வாய்கிழமை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்ட நிலையில் தற்போது அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்து.
இதையடுத்து குறித்த ஆறு பேரும் கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM