முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக நேற்றைய தினம் 84 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட குற்றச்சாட்டுக்காக ஒக்டோபர் 30 முதல் நேற்று வரையான காலப் பகுதியில் மொத்தமாக 744 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.