மாவீரர் நாள்  இடம்பெறும் இந்த வாரத்தில் மரம் நடுகையையும் மேற்கொள்ள முடியாது என மாங்குளம் பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (25) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட செயலாளர் தவபாலன் தலைமையில் மக்களுக்கு தென்னம் பிள்ளைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அவ்விடத்துக்கு சென்ற பொலிஸார் மரம் வழங்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரி தடை செய்த்துடன் இந்த வாரத்தில் சிரமதானம் செய்வதோ, மரம் நடுவதோ, வறுமையில் வாடுபவர்களுக்கு உதவிகள் வழங்குவதோ செய்யமுடியாது. மீறிச்செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

மாவீரர் நாள் இன்று அனுஷ்டிக்கபடவுள்ள நிலையில் இராணுவம் பொலிஸார்  தமிழர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.