பாலாவி விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் போதை ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து நேற்று வியாழக்கிழமை மாலை கற்பிட்டி கண்டகுழி பகுதியில் மேட்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒரு கிலோ 275 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி கண்டுகுழி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்ததுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவையும் கற்பிட்டி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.