மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோர் முன்னனியில் உள்ளார்.

அதன்படி ஜனாதிபதி ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோர், புர்கினா பாசோவின் ஜனாதிபதியாக மேலும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார் என்று அந் நாட்டு தேசிய சுயாதீன தேர்தல் ஆணையம் ஆரம்ப முடிவுகளின்படி அடிப்படையில் அறிவித்துள்ளது.

63 வயதான கபோர் 57.87 சதவீத வாக்குகளைப் பெற்று, முதல் சுற்றில் பாசோவின் தலைவராக தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் நியூட்டன் அகமட் பாரி வியாழக்கிழமை தெரிவித்தார். 

2015 ஆம் ஆண்டில் முதன் முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கபோருக்கும் அவரது 12 போட்டியாளர்களுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது.

மேற்கு ஆபிரிக்காவின் சஹேலில் அதிகரித்து வரும் பாதுகாப்பு நிலைமைகளுக்கு மத்தியில் புர்கினா பாசோவின் பரந்த பகுதிகளிலும் செயல்படும் அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எல் (ஐ.எஸ்.ஐ.எஸ்) உடன் இணைக்கப்பட்ட ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களின் அச்சுறுத்தல்களால் வாக்களிப்பு செயல்முறை சிதைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு, இந்த மோதலில் புர்கினா பாசோவில் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டதுடன் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புர்கினாபே மக்கள் மோதால் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.