காலிமுகத்திடல் அருகே தீடீர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த கொள்ளுப்பிட்டி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இரு பிள்ளைகளின் தந்தையான இவர், இருதய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகின்றது. காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று காலை உடற்பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த இவருக்கு திடீர் என்று சுகயீனம் ஏற்பட்டுள்ளது. 

இதன்போது கொழும்பு தேசியவைத்தியசாலைக்ககு இவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதன் போதும் அவர் உயிரிழந்திருந்ததாகவே கூறப்படுகின்றது.