பொலன்னறுவை வனவிலங்கு பிராந்தியத்திற்கு உட்பட்ட எலஹர  வனவிலங்கு சரணாலயத்திற்கு சொந்தமான  காட்டு யானை ஒன்று மின்சார வேலியில் இருந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.

நேற்று (25) கரண்டகொள்ள  பகுதியில் உள்ள ஒரு காணியில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள  மின்சார வேலியில் மின்சாரம் தாக்கியதன் காரணமாக  குறித்த காட்டு யானை இறந்துள்ளதாக வனவிலங்கு பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

மனித நடவடிக்கைகள் காரணமாக எலஹர வனவிலங்கு சரணாலயத்தில் ஒரே வாரத்திற்குள் பதிவான  இரண்டாவது காட்டு யானையின் மரணம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, பொலன்னறுவை பகுதியில்   இந்த ஆண்டில் உயிரிழந்துள்ள 45 ஆவது காட்டு யானை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.