தமிழ்நாடு திரைப்பட விழாவில்  விருதினை வென்றுள்ள நம்நாட்டுக் கலைஞன்  விமல்ராஜின்  "வெள்ளம்" குறுந்திரைப்படம்.

இவ்விழாவானது சென்னை, இந்தியாவில் கடந்த  ஐப்பசி மாதம் 25 திகதி முதல் கார்த்திகை மாதம் 22 திகதி வரை சிறப்பாக நடைபெற்றது.

இதில் முழுநீளத்திரைப்படங்கள், ஆவணப்படங்கள் , அனிமேஷன் படங்கள், குறுந்திரைப்படங்கள், காணொலிப்பாடல்கள், மற்றும் விளம்பரப்படங்கள், என்று 52 நாடுகளிலிருந்து 298 படங்கள் தெரிவாகியிருந்த நிலையில் நம்நாட்டுக் கலைஞன்  விமல்ராஜின்  "வெள்ளம்" குறுந்திரைப்படம் சர்வதேச ரீதியில் சிறந்த குறுந்திரைப்படத்திற்க்கான "பார்வையாளர்" விருதினை வென்றுள்ளது.