கலைஞர்களுக்கான திடீர் விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதி

Published By: Digital Desk 4

26 Nov, 2020 | 04:31 PM
image

(க.பிரசன்னா)

சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் கீழ் கலைஞர்களுக்கான திடீர் விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதி திட்டத்தினை டவர்ஹோல் அரங்க மன்றத்துடன் இணைந்து தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு முன்னெடுத்துள்ளது.

மேடை நாடகத்துறையின் நாடக எழுத்து, இயக்கம், நாடகத் தயாரிப்பு, நடிப்பு, ஒப்பனை, பின்னணித் தயாரிப்பு, ஒளியூட்டல், நடன அமைப்பு, ஆடை வடிவமைப்பு, நாடக இசை, அரங்கு முகாமைத்துவம் ஆகியத் துறைகளில் ஈடுபடும் படைப்பாளர்களுக்கே இக்காப்புறுதித் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

ஓர் ஆண்டுக்கு மாத்திரம் பெற்றுத்தருகின்ற இக் காப்புறுதியை வழங்குவதற்காக பயனாளிகளிடமிருந்து எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது என்பதுடன் மேடை நாடகத்துறையில் ஈடுபடுகின்ற 35 முதல் 75 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

தேசிய அளவில் விருதுகளை பெற்று விண்ணப்பிக்கும் திகதிக்கு கிட்டத்தட்ட 5 க்கும் குறையாத ஆண்டு காலம் செயற்பட்டு வருகின்ற அல்லது விண்ணப்பிக்கும் திகதிக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் குறையாத காலம் நாடகத் துறையில் செயற்பட்டு வருகின்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நாடகத்துறையில் பெற்றுக்கொண்ட நீடித்த அனுபவம் மற்றும் மூப்பு நிலைக்கு அமைய முன்னுரிமை வழங்கப்படுவதோடு தேர்வுக் குழுவின் முழு இணக்கத்தின் அடிப்படையில் நாடகத்துறை சார்ந்த வேறு முக்கிய தரப்பினரும் இந்த காப்புறுதித் திட்டத்துக்காக தெரிவு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பப்படிவங்களை டவர் ஹோல் அரங்க மன்றத்தின் இணையத்தளமான  www.towerhall.lk  இல் மும்மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பங்களை பதிவுத்தபாலில் அனுப்பவேண்டும்.

முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை உங்களது அனுபவம் மற்றும் மூப்பு நிலையை உறுதி செய்கின்ற ஆவணங்களுடன் 2020 டிசம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர் நாயகம், டவர்ஹோல் அரங்க மன்றம், சேனசிறிபாய, இலக்கம் 123, விஜேராம மாவத்தை, கொழும்பு 7 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் பொதுச்...

2025-11-08 17:03:53
news-image

6 வருடங்களாக  மலசலகழிவுகளை அகற்றும் வாகனம்...

2025-11-08 20:32:03
news-image

வரவு - செலவு திட்டத்தில் பாரிய...

2025-11-08 13:51:57
news-image

இலங்கையின் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை வெளிக்கொணரும் ”FOOTPRINT”...

2025-11-08 16:26:12
news-image

தாதியர் கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை: உடனடியாக...

2025-11-08 15:34:19
news-image

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-11-08 16:05:19
news-image

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து - மூவர்...

2025-11-08 17:09:32
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-08 17:03:03
news-image

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-11-08 16:46:04
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

2025-11-08 14:08:13
news-image

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் கைப்பற்றல்!

2025-11-08 15:57:05
news-image

சட்டவிரோதமாக இராமேஸ்வரத்திற்கு சென்ற இலங்கை பிரஜைக்கு...

2025-11-08 13:56:49