(நா.தனுஜா)
இலங்கையர்களுக்கு விவசாயத்துறை தொடர்பான உயர்கல்வியையும் தொழில்நுட்ப அறிவையும் இலவசமாகப் பெற்றுக்கொடுப்பதற்குத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் ரன்ஜா கொன்கிரிஜ் தெரிவித்திருக்கிறார்.
விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவிற்கும் நெதர்லாந்து நாட்டின் தூதுவருக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை விவசாயத்துறை அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.
ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் பழங்களும் மரக்கறிகளும் நெதர்லாந்திலிருந்தே அனுப்பிவைக்கப்படுகின்றன. அதேபோன்று மலர்களை உற்பத்தி செய்வதிலும் நெதர்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. இவை அனைத்திலும் நெதர்லாந்து உயர்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறது.
எனவே விவசாயத்துறை தொடர்பான உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவை இலங்கைக்குப் பெற்றுத்தருமாறு இன்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின்போது விவசாயத்துறை அமைச்சர் நெதர்லாந்து நாட்டின் தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.
அவை அனைத்தையும் எவ்வித குறையுமின்றிப் பெற்றுக்கொடுப்பதற்குத் தமது நாடு தயாராக இருப்பதாக இதன்போது தூதுவர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM