Published by T. Saranya on 2020-11-26 16:23:47
கல்முனை கல்வி வலயத்திற்குட்ப்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (27.112020) முதல் 7 நாட்களுக்கு மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத் அறிவித்துள்ளார்.
அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது, அக்கரைப்பற்று மற்றும் சாய்ந்தமடு ஆகிய பகுதிகளில் 20 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.