காணி அபகரிக்கும் நபர்களை கைது செய்ய விசேட பிரிவு - பாதுகாப்பு செயலாளர்

Published By: Digital Desk 4

26 Nov, 2020 | 03:08 PM
image

(க.பிரசன்னா)

காணி அபகரிப்புடன் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் எமது எதிர்கால சந்ததியினருக்காக வளங்களை நாம் பாதுகாக்க வேண்டுமெனவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Articles Tagged Under: கமல் குணரத்ன | Virakesari.lk

நாரஹென்பிட்டவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மாவட்டச் செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர்களுடனான சந்திப்பின்போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்ககையில்,

சட்டவிரோத காடழிப்பு பெருமளவில்  பரவாலாக இடம்பெற்று வருவது தொடர்பாக கவலை வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், இவ்வாறான  முயற்சிகள் இடம்பெறுவதற்கு முன்னரே அவற்றை அடையாளங் கண்டு காடழிப்பு இடம்பெறுவதை தடுத்து நிறுத்துவது  தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என தெரிவித்தார்.

இது போன்ற முயற்சிகளை தடுக்க  முப்படையினரும்  பொலிஸாரும்  விழிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி பணித்துள்ள அதேவேளை விமானப்படை தமது வளங்களை பயன்படுத்தி வான்வழி கண்காணிப்புக்களை மேற்கொள்ளுமாறும் பணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எமது எதிர்கால சந்ததியினருக்காக வளங்களை நாம் பாதுகாக்க வேண்டுமெனவும் வனவளங்கள் அழிக்கப்படுவது தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் இயற்கை வளங்கள் அழிவடைந்து செல்வதற்கு எதிராக செயற்படவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அண்மையில் இடம்பெற்ற காணி அபகரிப்பு சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர், காணி அபகரிப்புடன் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய விஷேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58