பி.சீ.ஆர் பரிசோதனைகளை புறக்கணித்தால் வழக்கு - பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை

Published By: Digital Desk 4

26 Nov, 2020 | 03:13 PM
image

(செ.தேன்மொழி)

சுகாதார பிரிவினர் பி.சீ.ஆர் பரிசோதனைகளை செய்துக் கொள்ளுமாறு அறுவுறுத்ல் வழங்கியும், அதனை புறக்கணித்து வரும் நபர்களுக்கு எதிராக  வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் 13 பொலிஸ் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் ஐந்து பொலிஸ் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பண்டாரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டுலுகம பகுதியில் 9 கிராமசேவகர் பிரிவுகளும், கண்டி மாவட்டத்தில் அலவத்துவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு கிராமசேவகர் பிரிவுகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் வசிப்பவர்களை வீடுகளிலேயே இருக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

இதேவேளை, புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருப்பவர்களில் சிலருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள சமூகமளிக்குமாறு சுகாதார பிரிவினர் ஆலோசனை வழங்கியுள்ள போதிலும், சிலர் அதனை புறக்கணித்து வருவதாக தெரியவந்துள்ளது. 

இவ்வாறு சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு புறம்பாக செயற்படும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைய சட்டநடவடிக்கை எடுப்பதுடன், வழக்கு தாக்கல் செய்யவும் முடியும்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இன்று வியாழக்கிழமை காலை ஆறு மணி வரையில் மாத்திரம் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 660 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருப்பவரகள் இந்த  ஒழுக்கவிதிகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.

இதேவேளை தற்போது இயங்கிவரும் நிறுவனங்கள், அலுவலகங்கள் கடந்த மாதம் 15 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவுறுத்தல்களுக்கமைய சுகாதார சட்டவிதிகளை கடைப்பிடித்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.அதற்கமைய முகக்கவசம் அணிதல் ,சமூக இடைவெளியை பேணுதல், உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கும் கைகளை சுத்தம் செய்துக் கொள்வதற்கும் வசதிகளை செய்துக் கொடுத்திருத்தல் மற்றும் வருகைத்தரும் நபர்களின் விபரங்களை சேகரித்து வைக்கவும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இந்த விடயங்கள் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் சுகாதார பிரிவுடன் இணைந்து பொலிஸாரும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்னர். இவ்வாறு வெளியில் செல்லும். அனைத்து சந்தர்ப்பத்திலும் பேனை ஒன்றை எடுத்துச் செல்வதற்கு மறக்கவேண்டாம். உங்களது விபரங்களை எழுதும் போது பிறர் பயன்படுத்திய பேனைகளை பயன்படுத்துவதை விட தாமே பேனை ஒன்றை கைவசம் வைத்திருப்பது மேலும் பாதுகாப்பாக இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; 'சமன்கொல்லா'...

2025-03-15 17:34:44
news-image

தேசிய ஒற்றுமைப்பாடு, நல்லிணக்க அலுவலகத்துக்கு நிர்வாகக்...

2025-03-15 17:50:28
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இளைஞன்...

2025-03-15 16:56:03
news-image

21 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன்...

2025-03-15 16:43:26
news-image

மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில்...

2025-03-15 16:29:09
news-image

கார் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-03-15 16:18:54
news-image

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக...

2025-03-15 17:30:49
news-image

தெஹிவளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-15 15:45:25
news-image

45 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-03-15 15:34:47
news-image

நீர்கொழும்பில் பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு

2025-03-15 15:22:57