முல்லைத்தீவு மாவட்டத்தில் வெடிப்புச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் தனியார் ஒருவருடைய காணியில் இருந்து குண்டு ஒன்று சற்று முன்னர் வெடித்துள்ளது.

குறித்த வெடிப்புச் சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், இராணுவத்தினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த கைக்குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தடையவியல் பொலிஸார் வரவைளக்கப்பட்டு தீவிர விசாரணையினை முன்னெடுத்துள்ளார்கள்.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளில் ஆயிரக்கணக்கான படையினர் பொலிஸார், புலனாய்வாளர்கள் நிறுத்தபட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடபெற்றுள்ளமை பிரதேச மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.