ரஷ்ய இராணுவம் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இது கசகஸ்தானில் உள்ள சாரி-ஷகன் சோதனை மையத்திலிருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளதாவும், ஏவுகணை தனது இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏவுகணையானது வான் மற்றும் விண்வெளி தாக்குதல்களில் இருந்து பதிலடி கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டது.

முன்னதாக ஒக்டோபரின் பிற்பகுதியில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சாரி-ஷகன் சோதனை தளத்தில் ஒரு புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை சோதனை செய்ததாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.