தென் கொரிய நாட்டின் மிகப்பெரிய இணையத்தள பாலியல் துஷ்பிரயோக வலையத்தின் சூத்திரதாரிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சோ ஜூ பின் என்ற இளைஞன் இணையத்தள பாலியல் துஷ்பிரயோக குழுவை நடத்திய குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளார். 

குறித்த குழு பாலியல் வீடியோக்களைப் பகிர்வதற்கு சிறுமிகளை அச்சுறுத்தியுள்ளது. பின்னர் அவை பணம் செலுத்தி பார்வையிட அரட்டை அறைகளில் (chatrooms) வெளியிடப்பட்டுள்ளன.

குறைந்தது 10,000 பேர் வரை அரட்டை அறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். சிலர் அரட்டை அறைகளை செயல்படுத்த 1,200 அமெரிக்க டொலர்கள் (£ 1,000) வரை செலுத்தியுள்ளனர்.

16 வயது சிறுமிகள் உட்பட சுமார் 74 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

"கவர்ந்திழுத்து மற்றும் அச்சுறுத்தி பாதிக்கப்பட்டவர்களின் மூலம்  உருவாக்கிய பாலியல் துஷ்பிரயோக பதிவுகளை குற்றம் சாட்டப்பட்டவர் பரவலாக விநியோகித்துள்ளார்" என சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சட்டங்களை மீறியதற்காகவும், இலாபம் ஈட்டுவதற்கு தவறான வீடியோக்களை தயாரித்து விற்பனை செய்த குற்றவியல் வலையத்தை நடத்தியதற்காகவும் சோ குற்றவாளி என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சோவின் குற்றச் செயலில் ஈடுபட்ட குழு அச்சுறுத்தல் மூலம் பெற்ற வீடியோக்களை டெலிகிராம் செயலியின் பயன்பாட்டில் இரகசிய அரட்டை அறைகளுக்கு விற்றுள்ளது.

இந்த வழக்கு தென் கொரியாவில் ஒரு தேசிய அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

கைது செய்யப்பட்டு சியோல் பொலிஸ் நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டபோது சோ , "என்னால் காயப்படுத்தப்பட்டவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,"   "தடுக்க முடியாத ஒரு பிசாசின் வாழ்க்கையில் தடை போட்டதற்கு நன்றி." என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து இதேபோன்ற பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து குறைந்தது 124 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், டெலிகிராம் மற்றும் சோ உள்ளிட்ட பிற சமூக ஊடகங்களில் 18 அரட்டை அறைகளை நடத்துபவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தென் கொரிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஐந்து பிரதிவாதிகளுக்கு ஏழு முதல் 15 ஆண்டுகள் வரை தண்டனை கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.