சமல் ராஜபக்ஷ மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சுப் பதவிப் பிரமாணங்கள் மேற்கொண்டுள்ளனர்.

உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் மேற்கொண்டார்.

அதேநேரம்  உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பொது பாதுகாப்பு அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

பொலிஸ் திணைக்களம், சிவில் பாதுகாப்பு படை மற்றும் பொது பாதுகாப்பு தொடர்பான ஒரு சில நிறுவனங்கள் முன்னதாகவே இந்த அமைச்சகத்தின் கீழ் வர்த்தமானி செய்யப்பட்டுள்ளன.