தற்பொழுது அரச வைத்தியசாலைகளில் தொற்றா நோய் கிளினிக் - சிகிச்சைக்கான மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது

மருந்து வகைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்க்கொள்வோருக்கு வசதியாக அரச ஒசுசல மருந்தகங்கள் 24 மணித்தியாலயமும் செயற்படுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.நாம் இந்த சூழ்நிலையில் பொது மக்கள் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு இணையத்தளம், தொலைபேசி மூலமாக இலக்கங்களை வெளியிட்டு வருகின்றோம். இந்த தொலைபேசி இலக்கங்களின்  ஊடாக மருந்து பட்டியலை வாட்ஸ்சப்(WhatsApp), வைபர்(Viber) மூலமாக அனுப்பி வைத்தால், நாம் தேவையான மருந்துகளை ஒசுசல மருந்தகத்தில் தயார் செய்து உங்களுக்கு கிடைக்கக்கூடியதாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

விசேடமாக கம்பஹா, கொழும்பு போன்ற பிரதேசங்களில் தற்போது சேவைகளை முன்னெடுத்துள்ளோம். இருப்பினும், இதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்களை மீண்டும் எதிர்வரும் சில தினங்களில் நாம் அறிவிப்போம். எமது மருந்தக கூட்டுத்தாபன இணையத்தளத்தில் தொலைபேசி இலக்கங்கள் உண்டு.

நீங்கள் தொற்றாநோய்க்கு உள்ளானவர்கள் என்றால் அதற்கான மருந்துகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டாம். கொரோனா தொற்றினால் உங்களுக்கு ஆபத்து ஏற்படுவதையும் பார்க்க தொற்றா நோய்க்கு மருந்துகளை பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சின் சார்பாக இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன் என்றார்.