உலகம் முழுவதும் கொடிய வைரஸ் கொரோனா பரவுவதைத் தடுப்பதில் முக்கிய பங்கை சனிடைசர்கள், கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் கொண்டுள்ளன.

இந்நிலையில், ஜப்பான் நிறுவனம் ஒன்று மிக விலை உயர்ந்த சொகுசு முகக்கவசங்களை தயாரித்துள்ளது.

அதாவது உயர்தர மக்களால் மட்டுமே இந்த முகக்கவசம் வாங்க முடியும். ஏனென்றால் அதன் விலை 9,600 அமெரிக்க டொலர் ஆகும்.

கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளன. குறிப்பாக  நகை மற்றும் ஆடைவடிவமைப்பு துறையில் மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

அவற்றை ஊக்குவிக்கும் விதமாக இந்த விலை உயர்ந்த சொகுசு முகக்கவசங்களை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளதாக கூறி உள்ளது.

கொரோனா ஊரடங்கு, பொருளாதார இழப்பு, வருமான இழப்பு உள்ளிட்ட பல காரணங்கள் சூழ்ந்துள்ள நிலையில், மக்கள் இந்த முகக் கவசங்கள் அணிவது ஒரு உற்சாகம் ஏற்படுமாம்.

இதில் புதியதாக 0.7 கரட் வைரங்கள், 300 க்கும் மேற்பட்ட ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் மற்றும் ஜப்பானிய வளர்ப்பு முத்துக்களான அகோயா முத்துக்கள் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன.

இது தவிர 800க்கும் மேற்பட்ட வகையிலான பல்வேறு முகக்கவசங்களையும் இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.