40 வயதுக்கு மேற்பட்ட பெண்களும், மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களும் அனோரெக்சியா என்ற பாதிப்புக்கு அதிகளவில் ஆளாகுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

மன கோளாறு மற்றும் மனப்போக்கின் காரணமாக ஏற்படும் பசியின்மை பிரச்சனையே அனோரெக்சியா என குறிப்பிடப்படுகிறது.

இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகும் பெண்களை மருத்துவர்கள், முதலில் அவர்களின் பாலியல் சார்ந்த நடவடிக்கைகளையும் அதன் வரலாற்றைப் பற்றியும் வினாக்கள் மூலம் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். 

அதனையடுத்து, அண்மையில் நடைபெற்ற சத்திரசிகிச்சை குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்கிறார்கள். 

இதன்பின்னர், தற்போதைய உறவு முறை குறித்து விவாதிக்கிறார்கள். 

மருத்துவர் கேட்கும் இத்தகைய வினாவிற்கு நோயாளியான பெண்கள் அளிக்கும் பதிலின் மூலமே அவர்களுக்கு எத்தகைய சிகிச்சை வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள்.

இத்தகைய பிரச்சனைக்கு ஆளாகுபவர்களுக்கு, அவர்களின் உடல்ரீதியான பாதிப்புகள் இருந்தால் ஒருவகையான சிகிச்சையும், அவர்களுக்கு பாலியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதற்கான பிரத்தியேக சிகிச்சை முறையுடன் கலந்தாலோசனையும் வழங்கப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கு மட்டும் ஈஸ்ட்ரோஜன் தெரபி மற்றும் டெஸ்டோஸ்டிரோன் தெரபி வழங்கி அவர்களை இத்தகைய பாதிப்பிலிருந்து மீட்கிறார்கள்.

பெரும்பாலான பெண்கள் இத்தகைய பிரச்சனையில் இருப்பதை உணராமல், தங்கள் உடல் எடையை அதிகரித்து கொண்டோ அல்லது குறைத்துக்கொண்டோ மேலும் பாதிப்புகளை அதிகரித்துக் கொள்கிறார்கள். 

அதே தருணத்தில் இத்தகைய பாதிப்பிற்குள்ளாகும் பெண்கள், தங்களது வாழ்க்கை நடைமுறையை ஆரோக்கியமான முறையில் மாற்றி அமைத்துக் கொண்டால் நாளடைவில் இத்தகைய பிரச்சனை மறைந்துவிடும்.

டொக்டர் ஸ்ரீதேவி.

தொகுப்பு அனுஷா.